தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்சிங் கல்லூரிக்கு தடை; மாணவிகள் முற்றுகை!

நர்சிங் கல்லூரிக்கு தடை; மாணவிகள் முற்றுகை!

நர்சிங் கல்லூரிக்கு தடை; மாணவிகள் முற்றுகை!


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்
: திண்டுக்கல்லில் மாணவிகளின் முற்றுகை போராட்டத்தால் அங்கீகாரமின்றி இயங்கிய நர்சிங் கல்லுாரி மூடப்பட்டது.

திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் மதர் தெரசா நர்சிங் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் உதவி செவிலியர் (ஏ.என்.எம்.,), மருத்துவ ஆய்வக உதவியாளர் பயிற்சி (டி.எம்.எல்.டி.,) உட்பட இரண்டாண்டு மருத்துவ பட்டய படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.

இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் முறைப்படி அங்கீகாரம் பெறாத பல்வேறு நர்சிங் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாநில மருத்துவ நலப்பணிகள் இயக்குனரகம் உத்தரவிட்டது.

இதையறிந்த மதர் தெரசா நர்சிங் கல்லுாரி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கல்லுாரியை நேற்று முற்றுகையிட்டனர். கல்லுாரி நிர்வாகி லலிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகள் மறியல் திடீரென மாணவிகள், நாங்கள் கட்டிய கட்டணத்தையும், சான்றிதழ்களை திரும்ப வழங்குகள் என கூறி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மாணவிகளை சமாதானம் செய்தனர். சில மாணவிகள் மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலாவிடம் புகார் அளித்தனர். 

கல்லுாரிக்கு வந்த இணை இயக்குனர் போலீசார் உதவியுடன் கல்லுாரியை மூட வலியுறுத்தினார். அவர் கூறியதாவது: 

ஏப்ரல் 10க்குள் மாணவிகளுக்கு அவர்கள் படிப்பிற்காக வழங்கிய பணம், சான்றிதழ்களை கல்லுாரி நிர்வாகம் திரும்ப வழங்க வேண்டும். மாணவிகள் போலீசாரின் பாதுகாப்பில் சான்றிதழ்கள் பெற கல்லுாரிக்கு வர வேண்டும், என்றார். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us