அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 10:58 AM
திருநெல்வேலி
:
நெல்லையில் அரசு சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்க வலியுறுத்தி சித்த
மருத்துவ மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும். நெல்லையில் உள்ள சித்தா மருத்துவக்கல்லூரியை பல்கலைக் கழகமாக மாற்றவேண்டும். இங்கு குழந்தைகள் மருத்துவப் பகுதி அமைக்க வேண்டும். கல்லூரியில் ரூ. 5 கோடியில் பல்நோக்கு வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் ஆய்வகம், பசுமை இல்லம் அமைக்க வேண்டும்.
திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி வேறு பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையை அரசு
கைவிட வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் கல்வி தரத்தை
மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நெல்லை சித்த
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குசித்த மருத்துவ மாணவர்கள் நலச் சங்கத் தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
