தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு

தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு

தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு


UPDATED : மார் 31, 2016 12:00 AM

ADDED : மார் 31, 2016 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2016 12:00 AM ADDED : மார் 31, 2016 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்
: தமிழகத்தில்
, 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், சிறுபான்மை மொழி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தெலுங்கு, கன்னடம், உருது மக்கள், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த, 2006ம் ஆண்டு தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தை தி.மு.க., கொண்டு வந்தது. இதனால் தெலுங்கு, கன்னடம், உருது மாணவ, மாணவியரின் தாய் மொழி நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது. நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், தமிழ் தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய சூழ்நிலை உருவானது. 

சிறுபான்மை அமைப்புகளின் கூட்டமைப்பினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், சிறுபான்மை மொழி மாணவர்கள், அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத, தேர்வுத்துறை இயக்குனரகம் கடைசி நேரத்தில் உத்தரவிட்டது. தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், தங்களது தாய் மொழி அழிந்து விட்டதாக, சிறுபான்மை மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை தற்போதைய அ.தி.மு.க., அரசு திரும்ப பெறும் என, சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அ.தி.மு.க., அரசு அதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இது, தெலுங்கு, கன்னட, உருது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர் தொகுதியில், 60 சதவீதம், தளி தொகுதியில், 80 சதவீதம் சிறுபான்மை மக்களின் ஓட்டுகள் உள்ளன. இந்த ஓட்டுகள், தி.மு.க., அ.தி.மு.க., தவிர பிற கட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us