UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 11:19 AM
அ நிறம் | அளவு
திருப்பதி
: சிறையில்
இருந்தபடி, கணவன், மனைவி இருவரும் முதுகலை பட்டம் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், சிந்தகானி மண்டலம், நாகலபஞ்ச கிராமத்தைச் சேர்ந்த சுதீர்குமார், நாகமணி தம்பதி, ஆறு ஆண்டுகளாக வரங்கல் மாவட்டத்தில் உள்ள, மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக உள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட போது, 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்த இவர்கள், தண்டனை காலத்தை வீணாக கழிக்க விரும்பாமல், மேற்படிப்பு படிக்க நினைத்தனர். மத்திய சிறையில், அதற்கு வசதியிருப்பதை அறிந்து, பி.ஏ., படித்து பட்டம் பெற்றனர். பின், எம்.ஏ., சோஷியாலஜி படிப்பில், முதுகலை பட்டம் பெற்றனர். இன்னும், 10 நாட்களில் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளனர்.
