விளையாட்டு ஒதுக்கீட்டில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
விளையாட்டு ஒதுக்கீட்டில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : ஏப் 08, 2016 12:00 AM
ADDED : ஏப் 08, 2016 11:29 AM
சென்னை
: எஸ்.ஆர்.எம்.,
பல்கலையில், விளையாட்டு ஒதுக்கீட்டில் இலவசமாக படிக்க
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எஸ்.ஆர்.எம்., பல்கலையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில் படிப்பு, தங்குமிடம், உணவு ஆகியவற்றை இலவசமாக வழங்கப்படுகிறது.
அதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாணவ, மாணவியர் ஏப்., 11, 12, 13 ஆகிய தேதிகளில் காட்டாங்குளத்துாரில் உள்ள, அதன் வளாகத்தில் நடைபெறுகிறது. அதில், 11ம் தேதி பூப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், மேஜைபந்து, வாலிபால் தேர்வு நடைபெறுகிறது. 12ம் தேதி இறகுபந்து, கால்பந்து, கூடைபந்து, சதுரங்கம் தேர்வு நடக்க இருக்கிறது. 13ல், தடகளம், ஹாக்கி, கபடி ஆகியவற்றிற்கு தேர்வு நடைபெறுகிறது.
அதில், கிரிக்கெட், கால்பந்து தடகளம், ஹாக்கியை தவிர மற்றவற்றில் இருபாலரும் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, 95660 33337, 94442 55724 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
