தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணம், புகழ், மகிழ்ச்சி தரும் ஊடகத்துறை!

பணம், புகழ், மகிழ்ச்சி தரும் ஊடகத்துறை!

பணம், புகழ், மகிழ்ச்சி தரும் ஊடகத்துறை!


UPDATED : ஏப் 08, 2016 12:00 AM

ADDED : ஏப் 08, 2016 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2016 12:00 AM ADDED : ஏப் 08, 2016 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊடகத்துறையில் பணியாற்றினால் பணம், புகழ், மகிழ்ச்சி கிடைக்கும் என, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் மணிகண்டன் பேசினார்.

ஊடகத்துறை படிப்புகள் குறித்து அவர் பேசியதாவது: 

இந்தியாவில் 20 ஆயிரம் பத்திரிகைகள் உள்ளன. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களும் பெருகியுள்ளன. ஊடக நிறுவனங்கள் 10 ஆயிரம் உள்ளன. ரேடியோ, எப்.எம்., நிறுவனங்களும் இயங்குகின்றன. ஸ்போர்ட்ஸ் தொலைக் காட்சியில் வாய்ப்பு கிடைத்தால் உலகம் முழுவதும் சுற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். தமிழகத்தில் ஆயிரம் திரைப்படங்கள் வெளிவருகின்றன. 

ஒவ்வொரு மனிதரும் சராசரியாக 2 மணிநேரம் தொலைக்காட்சியை பார்க்கிறார் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மன அழுத்தம், சோர்வுதான் காரணம் என தெரிந்ததும், அவை மக்களை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றன. 

இதழியல், விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பியல், திரைப்படம் தயாரிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, தொழில்நுட்பம் போன்ற 12 ஊடகத்துறை படிப்புகள் உள்ளன. மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் ஊடகத்துறை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us