தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் அதிகம்!

இந்தியாவில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் அதிகம்!

இந்தியாவில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் அதிகம்!


UPDATED : ஏப் 08, 2016 12:00 AM

ADDED : ஏப் 08, 2016 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2016 12:00 AM ADDED : ஏப் 08, 2016 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை
: இந்தியாவில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் அதிகம் உள்ளது என்றும்
, அதனை பயன்படுத்துவதில் மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

மும்பை ஆர்.பி.ஐ., தலைமையகத்தில் நடந்த மாணவர்களுக்கான அறிவுத் திறன் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் முன்பு உரையாடிய ரகுராம் ராஜன் பேசியதாவது: இந்தியாவில் மாணவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. இந்தியாவில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் அதிகம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதனைப் வெளிப்படுத்துவதில் மாணவர்கள் மிகவும் தெளிவாக நடந்து கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் பணி வசீகரமாகத் தெரிந்தாலும், இங்கு நெருக்கடிகள் அதிகம். கடின உழைப்பு இங்கு அவசியம். மேலும் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளின் நோக்கங்களை மக்கள் புரிந்துகொள்ளச் செய்வதும் மிகவும் அவசியம். நிதி தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல புதிய செயல்திட்டங்களை வகுக்கிறது. 

ஆனால் அவற்றை மக்கள் மத்தியில் எளிதான முறையில் எடுத்துச் செல்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us