தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவமற்ற ஆசிரியர்கள்?

விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவமற்ற ஆசிரியர்கள்?

விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவமற்ற ஆசிரியர்கள்?


UPDATED : ஏப் 11, 2016 12:00 AM

ADDED : ஏப் 11, 2016 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2016 12:00 AM ADDED : ஏப் 11, 2016 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளது. இம்மாணவர்களின் விடைத்தாள்கள், மார்ச் 14ம் தேதி முதல் மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீட்டு பணிகளில், 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள ஆசிரியர்களை மட்டுமே, சி.இ., ஹெச். ஓ., ஆகிய கண்காணிப்பு பொறுப்புகளை வழங்கவேண்டும். ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் தனியார் பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் அனுபவமில்லா, ஆசிரியர்களுக்கு தலைமை கண்காணிப்பு பொறுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, வேதியியல், இயற்பியல், தாவரவியல் உள்ளிட்ட மதிப்பீடுகளில் இந்நிலை உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மத்திய மாநில அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், தேர்வு சமயங்களிலேயே அனுபவமில்லாத ஆசிரியர்களுக்கு தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டு, அனுபவமிக்கவர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமித்தனர்.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை. விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் இதே நிலை உள்ளது. அனுபவமில்லா ஆசிரியர்களுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், பிழைகள் மற்றும் முறைகேடுகள் ஏற்படவும் வழி வகுக்கும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us