தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு வேலை வழங்கும் வேளாண் துறை

அரசு வேலை வழங்கும் வேளாண் துறை

அரசு வேலை வழங்கும் வேளாண் துறை


UPDATED : ஏப் 11, 2016 12:00 AM

ADDED : ஏப் 11, 2016 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2016 12:00 AM ADDED : ஏப் 11, 2016 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளாண் படிப்புகள் குறித்து, கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் சுதாகர் பேசியதாவது:

வேளாண் கல்லூரியில், 13 வகையான படிப்புகள் உள்ளன. விவசாய துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய தொழில்நுட்பங்களை விளக்கும் வகையில், அவ்வப்போது பாடங்கள் வடிவமைக்கப்படுகின்றன. 13 வகையான படிப்புகளில், எந்த படிப்பை தேர்வு செய்தாலும், அனைத்துக்கும் ஒரே வகையான விண்ணப்பமே வழங்கப்படுகிறது.

இணையதளம் வழியாக, ஆன்லைன் மூலமே, விண்ணப்பிக்க முடியும். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை. மே முதல் வாரம் துவங்கி, ஜூன் முதல் வாரம் வரை, ஒரு மாதம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறலாம். ஜூன் மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங் நடத்தப்படும். கோவை வேளாண் பல்கலையில்மட்டுமே, கவுன்சிலிங் நடக்கும்.

விண்ணப்பிக்கும்போது, குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்ய முடியாது; கவுன்சிலிங்கில் பங்கேற்கும்போது, இட ஒதுக்கீடு அடிப்படையில், தங்களுக்கு பிடித்தமான பாடத்தை தேர்வு செய்யலாம். வேளாண் படிப்புக்கு, அக்ரிகேட் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை போல், கட்ஆப் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மற்ற நான்கு பாடங்களையும் வகுத்து, அதில் கிடைக்கும் மதிப்பெண், அக்ரிகேட் மதிப்பெண்ணாக எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப மாணவர்கள், சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

வேளாண் துறையில், பொறியியல் சார்ந்த மூன்று விதமான படிப்புகளில் சேர கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் முக்கியம்; மற்ற, 10 வகையான படிப்புகளுக்கு கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருந்தால் போதும். வேளாண் துறை படிப்புகளுக்கு, அரசு துறையில் அதிகளவில் பணி வாய்ப்புள்ளது; ஊரக பகுதி கிளை வங்கிகளில், வேளாண் துறை அலுவலர்களாக பணிபுரியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us