கள்ளக்குறிச்சி பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 10:51 AM
கள்ளக்குறிச்சி
:
கள்ளக்குறிச்சியில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை
நிகழ்ச்சிகள் நடந்தது.
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் அனைவரும் கண்ணியமாக 100 சதவீத ஓட்டுப்பதிவை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்த வகையில் கள்ளக்குறிச்சி தனி சட்டசபை தொகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் நீட்டாபிரசாந்த் தலைமை தாங்கினார்.
பயிற்சி கலெக்டர் ஜெயசீலன், டி.ஆர்.ஓ., ராஜசேகர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜு, ஏ.கே.டி., பள்ளி தாளாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
