UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 11:02 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி
: அரசு
பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை வார விழாவில், மாணவர்கள் பேரணி, பள்ளி ஆசிரியைகள் ஆட்டோ பிரசாரம்
மேற்கொண்டனர்.
கவரைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று தீவிர மாணவர் சேர்க்கை வார விழா நடைபெற்றது. உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயபாலன் தலைமையில் நடந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவேந்திரன், முன்னிலை வகித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி வரவேற்றார். அதை தொடர்ந்து, அடுத்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியும், பள்ளி ஆசிரியைகளின் ஆட்டோ பிரசாரமும் நடைபெற்றது.
