UPDATED : ஏப் 15, 2016 12:00 AM
ADDED : ஏப் 15, 2016 11:53 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்
:
நாமகிரிப்பேட்டையில் இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
நாமகிரிப்பேட்டை வட்டார வளமையம் சார்பில், 2016-17ம் கல்வி ஆண்டுக்கான இடை நின்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அருள்மணி, மேற்பார்வையாளர் லதா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், 6 முதல், 14 வயதுடைய பள்ளியில் சேராமல், இடை நின்றல், மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த பணி, வரும், 25 ம் தேதி வரை நடக்கிறது.
