தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பண்பாட்டு கல்வி வழங்கும் விவேகானந்த வித்யாலயா

பண்பாட்டு கல்வி வழங்கும் விவேகானந்த வித்யாலயா

பண்பாட்டு கல்வி வழங்கும் விவேகானந்த வித்யாலயா


UPDATED : ஏப் 20, 2016 12:00 AM

ADDED : ஏப் 20, 2016 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2016 12:00 AM ADDED : ஏப் 20, 2016 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ணைக்காடு
: தமிழகத்தில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஆன்மீகம்
, சமூகம், கல்வி, நீதி, போதனை வளர்ப்பதற்காக ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் துவங்கப்பட்டது.

சித்திரச் சாவடி, குற்றாலம், சேரன்மாதேவி, கரூர், ராமநாதபுரம், ராமேஷ்வரம், திருநெல்வேலி, சேலம், திருவேடகம் ஆகிய இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. 1942ல் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்த் மஹராஜ் என்பவரால் தபோவனம் மற்றும் வித்யாலயா பள்ளிகள் குருகுல பள்ளியாக தொடங்கப்பட்டு ஆரம்ப கல்வி முதல், முதுகலை கல்வி வரை இருபாலருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டில் குருகுல விடுதியும், விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தபோவனமும் அவற்றில் ஒன்று. இங்கு மூன்றாம் வகுப்பு முதல் 1ம் வகுப்பு வரை செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் குறிக்கோள், மாணவர்களுக்கு பண்டைய கால குருகுல வாழ்க்கை பயிற்சியை வழங்குவதே.

நோக்கம்
: வத்தலக்குண்டிலிருந்து
30.கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மெயின் ரோட்டில் பசுமை சூழலில் பள்ளி அமைந்துள்ளது. குருகுல கல்வியில் இக்காலத்துக்கு ஏற்றவர்களாக மாணவர்களை நல்வழிப்படுத்துவதே இதன் குறிக்கோள். 

தரமான கல்வியுடன் நல்லொழுக்கம், பண்பாடு பேணுதல், ஆன்மிகம், கலாச்சாரம் அறிதல் போன்றவை குருகுல கல்வியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இதற்காக மாணவர்களை நெறிப்படுத்த, யோகா, போன்ற தியான பயிற்சியுடன், உடல் மற்றும் மன ஆற்றலை வளர்ப்பதும், குறிக்கோளாய் உள்ளது. ஆளுமை திறனை வளர்க்க ஆண்டுதோறும் பயிற்சி முகாம் நடத்தப்படும்.

பண்பாட்டு பயிற்சி:
குருகுல கல்வி பயிற்சி பெற்றோரே பின்னாள் வாழ்க்கையில் ஆனந்தமாக இருப்பர். பண்ணைக்காடு விவேகானந்த வித்யாலயா பள்ளியில் உங்கள் குழந்தையின் பொன்னான மாணவ பருவத்தை செலவழித்தால் அவர்கள் பின்னாளில் அனைத்து நேரங்களிலும் நிம்மதி வாழ்வை பெற முடியும்.

செயலர் விவேகானந்த வித்யாலயா குருகுலம் பண்ணைக்காடு பிரிவு, கொடைக்கானல். தொடர்புக்கு: 96269 04268

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us