UPDATED : ஏப் 29, 2016 12:00 AM
ADDED : ஏப் 29, 2016 10:21 AM
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக விடுதியில், சுத்திகரிப்பு
செய்யப்பட்ட குடிநீர் வழங்காததை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
பல்கலைக் கழகத்தில் வெளியூர் மாணவ- மாணவிகள் தங்கி படிக்க, ௧9 விடுதிகள்
உள்ளன. சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க அனைத்து விடுதியிலும், குடிநீர்
சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப் பட்டுள்ளது.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு பாரதிதாசன் மாணவர்கள் விடுதியில் இருந்த, குடிநீர்
சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானது. இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த
நடவடிக்கையும் இல்லை. இதனைக் கண்டித்து நேற்று மாலை 5.00 மணியளவில், விடுதி
மாணவர்கள், பல்கலைக் கழக பஸ்களை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விடுதியிலிருந்த
பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சாலையில் வீசினர்.
தகவலறிந்த பல்கலைக் கழக பதிவாளர், சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
