தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொல்லியல் ஆராய்ச்சி உதவி ஆய்வாளர் தேர்வு

தொல்லியல் ஆராய்ச்சி உதவி ஆய்வாளர் தேர்வு

தொல்லியல் ஆராய்ச்சி உதவி ஆய்வாளர் தேர்வு


UPDATED : ஏப் 30, 2016 12:00 AM

ADDED : ஏப் 30, 2016 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2016 12:00 AM ADDED : ஏப் 30, 2016 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
:
 கொங்குநாட்டுப் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் மற்றும் நடுகற்கள் குறித்த தொல்லியல் ஆராய்ச்சிக்கு, உதவி ஆய்வாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் செம்மொழித்தமிழாய்வு நிறுவனம், தகுதிவாய்ந்தவர்களுக்கு தொல்லியில்துறை ஆராய்ச்சிக்கான அனுமதிகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், சங்க இலக்கியப் பின்புலத்தில் கொங்குநாட்டுப் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் மற்றும் நடுகற்கள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள, கோவை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் தொல்லியல் ஆராய்ச்சிதுறை முதன்மை மேலாளர் ரவிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாராய்ச்சிக்கு உதவி ஆய்வாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, முதுகலை தமிழ் முடித்து ஆய்வு பணியில் அனுபவமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சங்க இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியலில் ஈடுபாடும் அனுபவமும் கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆர்வமுள்ளோர், மே 5க்குள், முதன்மை மேலாளர், தொல்லியல் துறை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, கோவை - 14 எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். தொடர்புக்கு: 98657 77065.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us