UPDATED : மே 05, 2016 12:00 AM
ADDED : மே 05, 2016 11:11 AM
திருப்பூர்
:
காங்கயம் ஈ.பி.ஈ.டி., கல்வி நிறுவனங்களில், கட்டுமானம், மின்னணுவியல், கணிப்பொறி அறிவியல் இயந்திரவியல் மற்றும் மின்னியல் துறை படிப்பில்
சேருவதற்கான, உதவித்தொகை நுழைவு தேர்வு, கல்லூரி வளாகத்தில் நடந்தது.
ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த, பிளஸ் 2 தேர்வு எழுதிய, 184 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இத்தேர்வில் முதல் ஐந்து ரேங்க் பெறும் மாணவ மாணவியருக்கு, 100 சதவீத கல்வி கட்டணம் இலவசமாகவும், இரண்டாவதாக, ஐந்து ரேங்க் மற்றும் மூன்றாவதாக, ஐந்து ரேங்க் பெறும் மாணவ, மாணவியருக்கு, முறையே, 50 மற்றும், 25 சதவீத கல்வி கட்டணம் இலவசமாக, ஈ.பி.ஈ.டி., கல்வி அறக்கட்டளை சார்பில்
வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்காக ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், தாராபுரம், பவானி மற்றும் காங்கயம் பகுதிகளில் இருந்து, இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுழைவு தேர்வுக்கான ஏற்பாடுகளை தாளாளர் துரைசாமி, இயக்குனர் கோவிந்தசாமி, துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
