UPDATED : மே 06, 2016 12:00 AM
ADDED : மே 06, 2016 11:22 AM
கள்ளக்குறிச்சி
:
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்லுாரி
முதல்வர் முத்துசுவாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 2016 -17-ம் கல்வியாண்டிற்கான பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல் வகுப்புகளுக்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.thiruvalluvaruniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய சான்று நகல்களுடன் ஜூலை 1ம் தேதி மாலை 5:00 மணிக்குள், கல்லுாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கல்லுாரி முதல்வர் முத்துசுவாமி தெரிவித்துள்ளார்.
