UPDATED : மே 10, 2016 12:00 AM
ADDED : மே 10, 2016 10:25 AM
விருதுநகர்
:
விருதுநகர் மாவட்டத்தில் கைத்தறி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்காக 60.15 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட உள்ளது.
கைத்தறி துறை
சார்பில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகளான காடா துணி, துப்பட்டா போன்றவைகள் நெசவு செய்யப்படுகிறது. மாவட்டத்தில் வத்திராயிருப்பு,
ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளை சேர்ந்த 27 கூட்டுறவு சங்கங்களில் ஜனவரி முதல் ஜூலை வரை மாணவர் சீருடை ,
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இலவச சேலை உற்பத்தி
செய்யப்படும்.
இதற்கான
உற்பத்தி திட்டத்தை ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் கைத்தறி துறையினர் வெளியிடுவர்.
ஆனால் இந்தாண்டு ஜனவரியில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வழங்குவதற்காக கூடுதலாக இலவச சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டது.
இதனால் இந்தாண்டு பள்ளி சீருடைக்கான உற்பத்தி திட்டம் மார்ச் முதல் வாரத்தில் வழங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் காடா துணி 14.90 லட்சம் மீட்டர், துப்பட்டா துணி 45.25 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்துணிகள் ஜூலை கடைசிக்குள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் கைத்தறி கூட்டுறவு சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
