UPDATED : மே 18, 2016 12:00 AM
ADDED : மே 18, 2016 11:32 AM
மதுரை
: மதுரை
மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அடிப்படையில் உசிலம்பட்டி கல்வி மாவட்டம் முதலிடம்
பெற்றது.
இக்கல்வி
மாவட்டத்தில், திருமங்கலம் பி.கே.என். பெண்கள்
மேல்நிலைப் பள்ளி மாணவி யமுனா 1179 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.
வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியில் பாடங்களில் சென்டம் பெற்றார்.
இப்பள்ளி மாணவி
ரோஹிணி, 1169 மதிப்பெண் பெற்று 2ம் இடம் பெற்றார். இவர், தமிழ்- 195,
ஆங்கிலம்- 189, இயற்பியல்- 191, வேதியியல்- 200, விலங்கியல்- 195, கணிதம்- 199 மதிப்பெண் பெற்றார்.
டி.கல்லுப்பட்டி
எம்.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி மாணவி ரேணுஸ்ரீ 1161 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இவர் தமிழ் - 194,
ஆங்கிலம்- 191, இயற்பியல் - 186, வேதியியல் - 197, விலங்கியல் - 195, கணிதம் - 198 மதிப்பெண் பெற்றார்.
மூன்றும் ஒரே
பள்ளி:
மேலுார் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி மாணவர்களே பிடித்தனர்.
மாணவர்
முத்துவிக்னேஷ்வரன் 1185 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.
விலங்கியல், கணிதத்தில் சென்டம் பெற்றார். பாலமுரளிக்குமார் 1184 மதிப்பெண் பெற்று 2ம் இடம் வென்றார். இவர் வேதியியல்,
விலங்கியல் பாடங்களில் சென்டம் பெற்றார். கிருத்திகா பார்வதி 1181 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இவர், வேதியியல் மற்றும் கணிதத்தில் சென்டம் பெற்றார்.
முதலிடம்
:
மூன்று கல்வி மாவட்டங்களில் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 94.67 சதவீதம் பெற்று உசிலம்பட்டி முதலிடமும், 94.08 சதவீதம் பெற்று மதுரை 2ம் இடமும்,
90.78 சதவீதம் பெற்று மேலுார் மூன்றாம் இடமும்
பெற்றன.
