தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘சீட்’ கிடைத்தால் படிப்பு; இல்லையேல் வேலை

‘சீட்’ கிடைத்தால் படிப்பு; இல்லையேல் வேலை

‘சீட்’ கிடைத்தால் படிப்பு; இல்லையேல் வேலை


UPDATED : மே 19, 2016 12:00 AM

ADDED : மே 19, 2016 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2016 12:00 AM ADDED : மே 19, 2016 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: அரசு கல்லூரியில் சீட்
 கிடைத்தால் படிப்பேன்; இல்லையென்றால், தறி வேலைக்கு செல்வேன், என, பிளஸ் 2 தேர்வில், மூன்றாமிடம் பெற்ற, அரசு பள்ளி மாணவன் சவுந்தர் கூறினார்.

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி பிரிவில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர் விவரம்:

பெருமாநல்லூர் அரசு பள்ளி மாணவி சவுந்தர்யா, 1,167 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றார். தமிழ், 193; ஆங்கிலம், 188; கம்ப்யூட்டர் சயின்ஸ், 191; பொருளியல், 195; வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியலில் தலா, 200 மதிப்பெண் பெற்றார்.

பெற்றோர் வெள்ளியங்கிரி, லட்சுமி; வெள்ளியங்கிரி டெய்லராக உள்ளார். சவுந்தர்யா கூறுகையில், வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை, தவறாமல் தினமும் படித்து விடுவேன். ஆசிரியர்கள் சொல்படி நடந்து கொள்வேன். அடுத்து, பி.காம்., படிக்க விரும்புகிறேன், என்றார்.

கேத்தனூர் அரசு பள்ளி மாணவி ஷிவானி, 1,154 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம் பெற்றார். தமிழ், 192; ஆங்கிலம், 188; இயற்பியல் 192; வேதியியல், 190; உயிரியல், 192; கணிதம், 200 மதிப்பெண் பெற்றார்.

பெற்றோர் சிவலிங்கம், பாரதி; கதர் கடையில், சிவலிங்கம் ஊழியராக உள்ளார். ஷிவானி கூறுகையில், பாடங்களை புரிந்து படித்ததால், தேர்வில் அனைத்து பாடங்களும் எளிதாக இருந்தது. ஆசிரியர்களும், நல்ல முறையில் எனக்கு வழிகாட்டி, அதிக மதிப்பெண் பெற உதவினர். அடுத்து, விவசாயம் அல்லது பொறியியல் படிக்க விரும்புகிறேன், என்றார்.

உத்தமபாளையம் அரசு பள்ளி மாணவன் சவுந்தர், 1,154 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம் பெற்றார். தமிழ், 189; ஆங்கிலம், 183; இயற்பியல், 191; வேதியியல், 199; உயிரியல், 194; கணிதம் 198 பெற்றார். பெற்றோர் பாஸ்கர், பிரேமா; இருவரும் இறந்து விட்டனர். மாமா அரவணைப்பில் உள்ளார். சவுந்தர் கூறுகையில், பெற்றோர் இல்லாத நிலையில், மாமா பாதுகாப்பில் படித்து

வருகிறேன். அரசு கல்லூரியில், சீட் கிடைத்தால், படிப்பை தொடர்வேன். இல்லையென்றால், மாமாவுடன் சேர்ந்து, தறி தொழிலில் ஈடுபடுவேன், என்றார்.

கருவலூர் அரசு பள்ளி மாணவி பவித்ரா, 1,152 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்றுள்ளார். தமிழ், 195; ஆங்கிலம், 166; கம்ப்யூட்டர் சயின்ஸ், 194; பொருளியல், 198; வணிகவியல், 199; கணக்கு பதிவியல், 200. பெற்றோர் மணி, தமிழ் செல்வி; மணி, தறி தொழிலாளியாக உள்ளார்.

மாணவி கூறுகையில், ஆசிரியர்கள், பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆதரவும் அதிக மதிப்பெண்பெற உறுதுணையாக இருந்தது. தினமும் பாடங்களை படித்ததால், தேர்வு எளிதாக இருந்தது. பி.காம்., சி.ஏ., படிக்க விரும்புகிறேன், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us