UPDATED : மே 26, 2016 12:00 AM
ADDED : மே 26, 2016 11:17 AM
கோவை
: கோவை
சிறுமுகையில், பெட்டிக்கடை நடத்தி வருபவரின் மகள்,
மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து
சாதித்துள்ளார்.
கோவை சிறுமுகையை சேர்ந்தவர் செல்வராஜ்; பெட்டிக்கடை வியாபாரி; மனைவி ஜெயசித்ரா; ரேஷன் கடை ஊழியர். இவர்களது மகள், பூமிகா, சிறுமுகை, விஜயலட்சுமி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினார்.
தேர்வு முடிவில், தமிழ் 99, ஆங்கிலம் 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில், தலா, 100 என, 498 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில், இரண்டாமிடம் பிடித்தார்.
பூமிகா
கூறுகையில், &'&'மாநில அளவில், முதலிடம் பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு படித்தேன்; இரண்டாமிடம் கிடைத்தது மகிழ்ச்சி. டாக்டராக வேண்டும் என்பது, என் விருப்பம், என்றார்.
நீலம்பூரை
சேர்ந்த, பவுண்டரி தொழிலாளி முத்துராமலிங்கம்- -
ஜெயலட்சுமி தம்பதியின் மகள் சந்தியா மாரி; சூலுார் அடுத்த
நீலம்பூர் ஜி.ஆர்.டி., சி.பி.எப்., மெட்ரிக் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதினார்.
தேர்வு முடிவில், 498 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றார். சந்தியா மாரி கூறுகையில், பள்ளியில், தினமும் நடத்தும் பாடங்களை அன்றே படித்து விடுவேன். தனிமையில் இருந்து படிப்பது எனது வழக்கம். டாக்டருக்கு படிக்க விருப்பம் என்றார்.
