UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM
ADDED : ஜூன் 01, 2016 11:13 AM
சென்னை
: சிறந்த
எழுத்தாளர்களுக்கான விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாகர்கோவிலில் உள்ள கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில், மாநில அளவில், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.இராமசுப்பையர், காலச்சுவடு நிறுவனர் சுந்தரராமசாமி, ஆகியோர் பெயரில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு, விருது மற்றும் பொற்கிழி வழங்கப்பட உள்ளன.
விருது பெற விரும்புவோர், 2015 - 16ம் ஆண்டுக்குள் எழுதிய, வரலாறு, இலக்கியம், சிறுகதை, புதினங்கள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் தொடர்பான நுால்களின், மூன்று பிரதிகளை, உரிய படிவத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். ஆகஸ்ட், இரண்டாவது வாரத்தில் நடைபெறும் விழாவில், விருது வழங்கப்படும்.
அதேபோல்,
கவிதை தொகுப்பிற்கு, கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த, மூன்று கவிதைகளுக்கு பொற்கிழி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு,
94420 79005, 04652 - 282082 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு
கொள்ளலாம்.
