தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண்மை பட்டய படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண்மை பட்டய படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண்மை பட்டய படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூன் 02, 2016 12:00 AM

ADDED : ஜூன் 02, 2016 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2016 12:00 AM ADDED : ஜூன் 02, 2016 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு
: 
வேளாண் இடுபொருட்களான உரம், பூச்சி மருந்து மற்றும் பிற இடுபொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக, வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்களுக்கான  வேளாண்மை விரிவாக்க பட்டயப்படிப்பு, ஈரோடு அக்காஸ் என்ற நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது.

ஜூன் இறுதியில், வகுப்பு துவங்குகிறது. உர உரிமம் பெறுவதற்கு இந்த பட்டயப்படிப்பு தேவை. வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்களால், இப்படிப்பு கற்பிக்கப்பட்டு, வேளாண் துறை மூலம் சான்றிதழ் வழங்கப்படும். வாரத்துக்கு ஒரு நாள் என, 48 சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுகிழமைகளில், அக்காஸ் நிறுவனம், வித்யா நகர், மேல் திண்டல், ஈரோடு என்ற முகவரியில் கற்பிக்கப்படுகிறது. 

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று, சான்றிதழ் உள்ளவர்கள், அவரது பெயரில் உரம், பூச்சி மருந்து, விதை ஆகிய ஏதாவது ஒன்றில் உரிமம் பெற்றவராக இருத்தல் வேண்டும். இதற்கான கல்வி கட்டணத்தில், 50 சதவீதத்தை, அரசு மானியமாக வழங்கும். விருப்பம் உள்ளவர்கள், நேரடியாக பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us