தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM

ADDED : ஜூன் 04, 2016 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM ADDED : ஜூன் 04, 2016 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

கோவை மத்திய சிறை எஸ்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மத்திய சிறையில், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தேவையான கல்வி தகுதியுடன், 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 + தர ஊதியம் 2,800 ரூபாய்.

இதேபோன்று ஒரு சிறுதொழில் பயிற்றுநர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு கல்வி தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி மற்றும் ஓவியப்பயிற்சி சான்றிதழ் வேண்டும். ஆறு மாதம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 + தர ஊதியம் 2,800 ரூபாய்.

இப்பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள், உரிய கல்வி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் ஆகியவற்றுடன், வரும் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு, மத்திய சிறை எஸ்.பி., முன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us