தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி நுழைவு தேர்வுக்கு தடை

அரசு பள்ளி நுழைவு தேர்வுக்கு தடை

அரசு பள்ளி நுழைவு தேர்வுக்கு தடை


UPDATED : ஜூன் 16, 2016 12:00 AM

ADDED : ஜூன் 16, 2016 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2016 12:00 AM ADDED : ஜூன் 16, 2016 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமுல்லைவாயல்
: தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க
, பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்திய, திருமுல்லைவாயல் அரசு பள்ளியில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நுழைவுத் தேர்வு நடத்த, தடை விதித்தனர்.

திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, பிளஸ் 1 சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்து, நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நுழைவுத் தேர்வால் பாதிக்கப்பட்ட விஜயஸ்ரீ என்ற மாணவியின் தந்தை, திருவள்ளூர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இதனால், ஏழை மாணவர்கள் பலர், மேல்நிலைக் கல்வி பயில முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது குறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி, அந்தப் பள்ளியில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோரிடம், நேரில் விசாரணை நடத்தினார்.

பின், சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவி விஜயஸ்ரீயை, பள்ளியில் சேர்க்கும்படி, தலைமையாசிரியைக்கு அறிவுறுத்தினார். அரசு பள்ளியில் எக்காரணத்தை முன்னிட்டு, எந்த வகுப்புக்கும் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று தடை விதித்து, தலைமை ஆசிரியைக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us