UPDATED : அக் 08, 2009 12:00 AM
ADDED : அக் 08, 2009 12:04 PM
லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த நாவலாசிரியை ஹிலாரி மான்டெல்லுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கில இலக்கியத்தில் புகழ் பெற்ற நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புக்கர் விருது வழங்கி கவுரவப்படுத்தப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி, அனிதா தேசாய், அருந்ததிராய், அரவிந்த் அடிகா உள்ளிட்டோர் இந்த விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு புக்கர் விருது பெறுபவர்கள் பட்டியலில் இந்தியர்கள் பெயர் இடம் பெறவில்லை.
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஹிலாரி மான்டெல் (57). 1520ம் ஆண்டை சேர்ந்த கதையை பின்னணியாக வைத்து, ‘உல்ப் ஹால்’ என்ற நாவலை எழுதியதற்காக ஹிலாரிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. லண்டனில் அக்., 6ம் தேதி நடந்த விழாவில், ஹிலாரி மான்டெல், 40 லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
