தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி முறைக்கு கருத்துக்கள் வரவேற்பு

சமச்சீர் கல்வி முறைக்கு கருத்துக்கள் வரவேற்பு

சமச்சீர் கல்வி முறைக்கு கருத்துக்கள் வரவேற்பு


UPDATED : அக் 20, 2009 12:00 AM

ADDED : அக் 20, 2009 01:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2009 12:00 AM ADDED : அக் 20, 2009 01:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்க இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சமச்சீர் கல்வியை செயல்படுத்துவதன் முதல்கட்டமாக, பொதுப் பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் நடந்து வந்தன.


தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பொது வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு www.pallikalvi.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில பாடத்திற்கான பொது வரைவுப் பாடத் திட்டம் விரைவில் வெளியிடப்படும்.


தற்போது வெளியிடப்பட்டுள்ளது வரைவுப் பாடத் திட்டம். இதன் மீது கல்வியாளர், ஆசிரியர் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு, அதன்படி பாடத் திட்டம் இறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்ட பாடத் திட்டம், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி துவங்கும். பாடத் திட்டம் சார்ந்து ஆசிரியர்கள், பொது மக்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


கருத்துகளை பள்ளிக் கல்வியின் இணைய தளம் மற்றும் dtert@tn.nic.in
என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தலாம். இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், கல்லூரிச் சாலை, சென்னை என்ற முகவரிக்கு கடிதம் மற்றும் 044 28211392 என்ற எண்ணிற்கு பேக்ஸ் வாயிலாகவும் அனுப்பலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us