தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் ரங்கநாதன் கல்லூரி ஒப்பந்தம்

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் ரங்கநாதன் கல்லூரி ஒப்பந்தம்

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் ரங்கநாதன் கல்லூரி ஒப்பந்தம்


UPDATED : அக் 20, 2009 12:00 AM

ADDED : அக் 20, 2009 02:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2009 12:00 AM ADDED : அக் 20, 2009 02:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லூரி மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பி.எஸ்.என்.எல்., வளாகத்தில் பயிற்சி அளிப்பது, தற்போதைய தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்களில் கல்லூரி மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வது, பி.எஸ்.என்.எல்., வளாகத்தில் தொலை தொடர்பு சம்பந்தமான சுவிட்சிங், பரிமாற்றங்கள் மற்றும் கருவிகளில் மாணவர்கள் பயிற்சி பெறுவது, பி.எஸ்.என்.எல்., புதிய தொழில் நுட்பங்களை கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகிய நோக்கங்களுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர் பிரான்சிஸ் ஜேக்கப் மற்றும் ரங்கநாதன் பொறியியல் கல்லூரி சேர்மன் முருகேசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர் பிரான்சிஸ் ஜேக்கப் பேசுகையில், சிறந்த சேவையால் பி.எஸ்.என்.எல்., மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய வளர்ச்சி விகிதமாக ஆண்டுக்கு ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களை பெறுவதன் மூலம், மூன்று முதல் மூன்றரை ஆண்டுகளில் நாட்டின் 85 சதவீத பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவை பரவி விடும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us