UPDATED : ஆக 20, 2020 12:00 AM
ADDED : ஆக 20, 2020 07:31 AM
தமிழகத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் டிப்ளமோ படிப்பில் சேர, 2020-21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கு, www.tngptc.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கூறியுள்ளதாவது:
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற மாணவிகள் முதலாமாண்டில் சேர்வதற்கும், பிளஸ்2 அல்லது இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ., படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு சேரும் மாணவிகளிடம், ஆண்டு கல்வி கட்டணமாக, 2,157 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை, லேப்டாப், இலவச பஸ் பாஸ், பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாளாகும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
