தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி தொலைக்காட்சிக்கு ஆசிரியர்கள் வீடியோ பதிவு

கல்வி தொலைக்காட்சிக்கு ஆசிரியர்கள் வீடியோ பதிவு

கல்வி தொலைக்காட்சிக்கு ஆசிரியர்கள் வீடியோ பதிவு


UPDATED : ஆக 25, 2020 12:00 AM

ADDED : ஆக 25, 2020 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2020 12:00 AM ADDED : ஆக 25, 2020 01:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரையில் கல்வி தொலைக்காட்சிக்காக ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வீடியோ பதிவுகள் சேதுபதி பள்ளியில் துவங்கியது.
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கல்வித் துறை சார்பில் மாணவர் களுக்கு கல்வி தொலைக் காட்சி மூலம் பாடங்கள் வாரியாக ஆசிரியர்களின் வீடியோ பாடங்கள் ஒளி பரப்பப்படுகின்றன. மாவட்டம் வாரியாக பல்வேறு பாடங்கள் குறித்து தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வீடியோக்கள் பதிவு பணிகள் நடக்கின்றன. 
மதுரையில் நான்காம் வகுப்பு கணிதம், ஏழாம் வகுப்பு அறிவியல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 கணக்குப் பதிவியல் பாடங்களுக்கு ஆங்கில வழி பாடப்பதிவுகள் துவங்கவுள்ளது. 50 மெட்ரிக், 50 அரசு ஆசிரியர்களுக்கு வீடியோ பாடம் எடுப்பது, பி.பி.டி., தயாரிப்பது, பி.பி.டி., அனிமேஷன் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். 
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் வளர்மதி பயிற்சியை துவக்கினார். கல்வித் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், தியாக ராஜன், கணபதி, தலைமையாசிரியர் சரவணன், தென்கரை முத்துப்பிள்ளை, செந்தில் குமார், ஆசிரியைகள் கோடீஸ்வரி, ஷியாமளா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us