தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டேட் பாங்க் கிளரிகல் தேர்வு எப்போது?

ஸ்டேட் பாங்க் கிளரிகல் தேர்வு எப்போது?

ஸ்டேட் பாங்க் கிளரிகல் தேர்வு எப்போது?


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ள ஸ்டேட் பாங்கின் கிளார்க் பணிக்கான போட்டித் தேர்வு வரும் நவம்பர் 8 மற்றும் 15ந் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இப்போது அத்தேர்வு நவம்பர் 22ந் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 பேட்ச் என்ற அடிப்படையில் 6 பேட்சுகளாக இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படவுள்ளனர். எஸ்.எம்.எஸ்., இமெயில் மற்றும் அழைப்புக் கடிதம் மூலமாக தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படுகிறது.


தேர்வுக்குச் செல்லும் போது இவற்றில் ஒன்றை, ஏற்கனவே பணம் கட்டியதற்கான ஒரிஜினல் ரசீதுடன் எடுத்துச் செல்வது கட்டாயமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட அழைப்புக் கடிதத்தைப் பெறுபவர்கள் அவற்றை மொத்தமாக தேர்வுக்கு எடுத்துச் சென்று பணம் கட்டியதற்கான ரசீதுடன் தேர்வு அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் தர வேண்டும்.


நவம்பர் 2ந் தேதிக்குள் அனைவருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு விடும். அழைப்புக் கடிதம் பெறாதவர்கள் இணைய தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதற்கான இணைய தள முகவரி அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. இணைய தளத்திலும் இதைக் காண முடியாதவர்கள் பணம் கட்டிய ஒரிஜினல் ரசீதுடன் ஸ்டேட் பாங்கின் உள்ளூர் தலைமை அலுவலகத்தில் டூப்ளிகேட் அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு மையங்களில் மாற்றம் செய்ய எப்போதும் இயலாது.


ஒரிஜினல் பணம் கட்டிய ரசீதைத் தொலைத்திருப்பவர்கள் அதே வங்கிக் கிளையில் பணம் கட்டியதற்கான சான்றிதழ் கடிதத்தைப் பெற்று தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்த பிற தகவல்களை அறிய பார்க்கவேண்டிய இணைய தள முகவரி www.statebankofindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us