UPDATED : அக் 26, 2009 12:00 AM
ADDED : அக் 26, 2009 01:49 PM
கடந்த 20032008 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பாரதியார் பல்கலை பற்றிய மறு மதிப்பீட்டு ஆய்வுக்காக பல்கலைக்கு வந்திருந்த நாக் கமிட்டியினர், பல்கலை மாணவர்கள் மத்தியில் ஒரு நாள் துணைவேந்தர் போட்டி நடத்தினர்.
ஆய்வின் ஒரு பகுதியாக, பல்கலையின் 36 துறைகளை சேர்ந்த மாணவ, மாணவியருடன் உரையாடினர். பல்கலையில் உள்ள கல்வித் தரம், உள்கட்டமைப்பு வசதிகள், கேன் டீன், நூலகம், மாணவர் சேவை தரம், இனி தேவைப்படும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தனர்.
கூட்ட அரங்கில், பல்கலை பேராசிரியர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், நாக் கமிட்டி உறுப்பினர்களிடம் வெளிப்படையாக பேச மாணவர்கள் தயங்கினர்.
மாணவர்களின் தயக்கத்தை மாற்ற விரும்பிய நாக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டில்லி சமஸ் கிருத பல்கலை பேராசிரியர் கீதா, சரி... உங்களுக்கு ஒரு போட்டி. உங்களில் ஒருவருக்கு, பாரதியார் பல்கலையின் துணைவேந்தராக பணிபுரியும் வாய்ப்பு ஒருநாள் மட்டும் வழங்கப்பட்டால், என் னென்ன புதிய மாற்றங்களை அமல்படுத்துவீர்கள்? நல்ல கருத்துக்களை கூறும் மாணவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது என்றார்.
இந்த சவால் கேள்வி, மாணவர்களின் மவுனத்தை கலைத்தது. போட்டி போட்டுக் கொண்டு ஐடியாக்களை அள்ளி வீசினர். பலர் கருத்துகள் கூறினாலும், ஓரிரு மாணவர்கள் மட்டுமே வித்தியாசமாக பதில் அளித்தனர். எம்.பி.ஏ., துறை மாணவர் பிருத்விராஜ் பேசுகையில், பல்கலை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை பெரிய ஆராய்ச்சியாளர் களாக மாற்றும் கல்வித் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்; நோபல் பரிசு பெறும் அளவுக்கு அனைவரையும் தகுதி உள்ளவர்களாக உயர்த்த வேண்டும்.
ஒரு நாள் துணைவேந்தர் ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டால் இதற் கான திட்டங்களை முதலில் செயல் படுத்துவேன், என்றார்.
மற்றொரு மாணவி பேசுகையில், பல்கலையில் ஆன்லைன் தேர்வு முறையை அமல்படுத்த முயற்சிப் பேன், என்றார்.ஆக்கபூர்வமாகவும், புதுமையாகவும் இருந்த இவர்களின் கருத்துகளைக் கேட்ட நாக் கமிட்டி உறுப்பினர்கள், இருவரையும் பாராட்டினர்.
ராஜஸ்தான் பல்கலை துணைவேந்தர் சோலங்கி, இருவருக்கும் பரிசுகள் வழங்கினார். மறு ஆய்வு பணிகளை முடித்துக் கொண்ட நாக் கமிட்டியினர் நேற்று கிளம்பிச் சென்றனர். பெங்களூரில் உள்ள கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் பல்கலைக்கு மறுமதிப்பீடு கிரேடு வழங்கப்படவுள்ளது.
