தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற மாணவர்களுக்காக பாலிடெக்னிக் துவக்க முடிவு

கிராமப்புற மாணவர்களுக்காக பாலிடெக்னிக் துவக்க முடிவு

கிராமப்புற மாணவர்களுக்காக பாலிடெக்னிக் துவக்க முடிவு


UPDATED : அக் 26, 2009 12:00 AM

ADDED : அக் 26, 2009 02:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2009 12:00 AM ADDED : அக் 26, 2009 02:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்பாக்கத்தில் சுற்றுப்புற கிராம மாணவ மாணவிகளுக்காக பாலிடெக்னிக் கல்லூரி துவக்கப்படும் என இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் தெரிவித்தார். கல்பாக்கத்தில் இயங்கிவரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை சத்தியபாமா பல்கலைக் கழகத்துடன் இணைந்து, கல்பாக்கம் அடுத்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கும் திட்டத்தை 2005ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பென்டர், நர்சிங் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றா வது ஆண்டாக பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் அணுபுரத்தில் தொடக்கவிழா நடந்தது. இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பல்தேவ்ராஜ் பயிற்சியை துவக்கி வைத்து பேசும்போது, கல்பாக்கம் மேம்பாடு அருகில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியோடு இணைந்திருக்க வேண்டும்.
 
அதுதான் முழுமையான வளர்ச்சி. கிராமங்களில் பசுமையை ஏற்படுத்தவும், தூய்மையாக வைத்திருக்கவும் மாநில அரசு மற்றும் வர்த்தக நிறுவனங் களுடன் ஆலோசித்து வருகிறோம். கிராமங்களின் தனித்தன்மை மாறாமல் செயல்படுத்தப்படும். உங்களின் கனவுகளை நனவாக்க உதவிகளை செய்வோம். இப் பகுதியை சேர்ந்தவர்களுக்காக தனி பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப் படும். இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளில் அதிவேக ஈனுலைகள் அதி கரித்து விடும். அப்போது நிலக்கரி தேவையும் இருக்காது என்றார்.
 
சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசும்போது, கல்பாக்கத்திற்கு என்ன தேவை என்றாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.  பாலிடெக்னிக் கல்லூரி தேவை என்றால் அதை தொடங்கவும் தயார்.
மற்ற இடங்களில் உள்ள கிராம வள மையங்களில் பயிற்சி பெறுபவர்களைவிட இங்கு குறைவாகவே உள்ளனர்.
 
இங்கு வந்து செல்வதில் பல பிரச்னைகள் இருக்கலாம். பஸ் பிரச்னை என்றால் நானே பஸ் அனுப்புகிறேன். தற்போது தொழிற்பயிற்சி பெற்ற 10 லட்சம் பேர் தேவையாக என்பதால், மாதம் 10 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

பாவினி அணுமின் திட்ட இயக்குனர் பிரபாத்குமார், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி, சத்தியபாமா பல்கலைக் கழக துணைவேந்தர் மனோகரன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கல்பாக்கம் ஜி.எஸ்.ஓ., முதன்மை நிர்வாக அலுவலர் ரமணா வரவேற்றார். இந்திராகாந்தி அணு ஆராய்ச்சிமைய நிர்வாக அலுவலர் ராகவன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us