UPDATED : செப் 09, 2020 12:00 AM
ADDED : செப் 09, 2020 07:14 AM
சென்னை:
விதிமுறைகள் வகுக்காமல், &'ஆன்லைன்&' வகுப்புகள் நடத்த தடை கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வருவதால், உரிய விதிமுறைகளை வகுக்காமல், ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரித்தது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை, நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். இவ்வழக்கில் இன்று, நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கின்றனர்.
