தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தல்

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தல்

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தல்


UPDATED : செப் 13, 2020 12:00 AM

ADDED : செப் 13, 2020 08:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2020 12:00 AM ADDED : செப் 13, 2020 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மதுரை மாணவி ஜோதிகா ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டதற்கு, கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என, கூறி உள்ளனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:

நீட் தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலை குலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது. மாணவி ஜோதிஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வில் கோர முகத்தை காட்டுகிறது
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:

மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, தற்கொலையால், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: 

நீட் தேர்வு எத்தனை உயிர்களை பலி வாங்க போகிறதோ? நீட் தேர்வு ரத்து செய்தால் தான், மாணவ, மாணவிகளின் உயிர்பலியை தடுக்க முடியும்; சமூக நீதியையும் நிலை நாட்ட முடியும்.
த.மா.கா., தலைவர் வாசன்:

மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த நேரத்தில் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us