தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வீட்டை புத்தக சோலையாக மாற்றிய சோலையப்பன்

வீட்டை புத்தக சோலையாக மாற்றிய சோலையப்பன்

வீட்டை புத்தக சோலையாக மாற்றிய சோலையப்பன்


UPDATED : செப் 28, 2020 12:00 AM

ADDED : செப் 28, 2020 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2020 12:00 AM ADDED : செப் 28, 2020 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தினசரி நாளிதழ்களுடன், வாரத்தின் குறிப்பிட்ட நாளில் இணைப்பு மலர் வெளிவரும். இணைப்பு மலருக்காக, நாளிதழ் வாங்கும் வாசகர்களும் உள்ளனர். பொதுவாக, படித்த மலரை பாதுகாக்க நினைத்தாலும், வீட்டில் இடப்பிரச்னை, உறவுகளுக்கு தொந்தரவு போன்ற காரணத்தால், பலர், படித்ததும் எடைக்கு போட்டு விடுவர்.
அதுபோல் இல்லாமல், 40 ஆண்டுகளாக, தினசரி நாளிதழுடன் வரும் இணைப்பு மலர்களை சேமித்து வைத்து, வீட்டை புத்தக சோலையாக மாற்றி யுள்ளார், வேளச்சேரியைச் சேர்ந்த கதி. சோலையப்பன், 86.தினசரி நாளிதழில் வெளிவரும், இலக்கியம், வணிகம், சுற்றுலா சார்ந்த முக்கிய செய்திகளையும் சேகரித்து வைத்துள்ளார். ஆயிரக்கணக்கான தமிழ், ஆங்கில புத்தகங்களையும் சேகரித்து வைத்து, வீட்டை நுாலகமாகவே மாற்றி வைத்திருக்கிறார்.
தற்போது, 10 முதல், 15 ஆண்டுகள் வரையிலான, தமிழ் நாளிதழ்களின் இணைப்பு இதழ்களை சேகரித்து வைத்துள்ளார்.பிரபல வார இதழ்கள், 1928 முதல், &'டைம்ஸ் ஆப் இந்தியா&' பத்திரிகையில் வெளிவந்த, ஆண்டு மலர் ஆகியவற்றையும் வைத்துள்ளார்.மேலும், 3,000 புத்தகங்கள் உள்ளன. அதில், 1895ல் வெளிவந்த ஆங்கிலம்- தமிழ் டிக்ஸ்னரி; 115 ஆண்டுக்கு முன் வெளிவந்த கந்தபுராணம் போன்ற, மிகவும் பழமையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதோடு, மத்திய அரசு புதிதாக வெளியிட்டு புழக்கத்தில் இல்லாத நாணயங்கள், ஐந்து பிரதமர்கள் ஒன்றாக நிற்கும் புகைப்படம் போன்ற அரியவகை பொக்கிஷங்களையும் சேகரித்துள்ளார். வரவேற்பு அறை மற்றும் ஒரு படுக்கை அறை முழுவதும், புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார்.
இது குறித்து, கதி.சோலையப்பன் கூறியதாவது: 

தமிழக அரசின் தொழில்துறையில், 34 ஆண்டுகள் இணை செயலாளர் நிலையில் பணிபுரிந்து, 1993ல் ஓய்வு பெற்றேன். 14 வயதில் இருந்தே, வாசிப்பு, சேகரிப்பு பழக்கம் துவங்கியது. தினசரி, ஒன்பது நாளிதழ்கள் வாங்கி படிக்கிறேன். கண் பார்வை குறைந்த நிலையிலும், வாசிப்பை நிறுத்தவில்லை. முக்கிய செய்திகளை, துண்டித்து வைப்பேன். 40 ஆண்டுகளாக, இணைப்பு மலர்களை சேகரித்து வருகிறேன்.
இடம் பெயர்வு காரணமாக, சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது, 10 முதல், 15 ஆண்டுகள் வரை வெளிவந்த, இணைப்பு மலர்கள் உள்ளன. தினசரி வாசிக்கும் ஒவ்வொரு செய்தியும், பாதுகாக்க வேண்டிய வரலாற்று பெட்டகம் தான். பல செய்திகளை, மனதில் தான் பதிய வைக்க முடிகிறது. தற்போதுள்ள, தொழில்நுட்ப வசதியில், பேப்பர் வடிவ செய்திகளை இணையம் வழியாக சேகரித்து வைக்க முடியும்.
நான், சேகரித்து வைத்துள்ள புத்தகங்கள், மலர்கள், பொக்கிஷங்களை எனக்கு பின்னால் பாதுகாப்பது கடினம். அதனால், தேவைப்படுவோருக்கு வழங்க தயாராக உள்ளேன். அதில், கிடைக்கும் நிதியை, ஏழை மாணவர்கள் கல்விக்காக வழங்க முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இவரை பற்றியும், புத்தகங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள, 044- - 22590853 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us