UPDATED : அக் 30, 2009 12:00 AM
ADDED : அக் 30, 2009 11:57 AM
அ நிறம் | அளவு
எம்.பி.ஏ., படிப்பில் சேர நடத்தப்படும் "கேட்&' (காமன் அட்மிஷன் டெஸ்ட்) நுழைவுத்தேர்வு இந்தாண்டு கம்ப்யூட்டர் மூலம் நடக்கிறது. எனினும், தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த முறை சற்று குறைந்துள்ளது.
எம்.பி.ஏ., படிக்க இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,) சேர "கேட்&' நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம். முதன் முறையாக இந்தாண்டு, கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.
கம்ப்யூட்டர் முறையில் நடத்தப்படுவதால், மாணவர்கள் வசதிக்காக, பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 7 வரை உள்ள நாட்களில் நடைபெற உள்ளன. தேர்வு எழுத இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 34 ஆயிரம் பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஐ.எம்., சார்பில் இத்தேர்வை, கம்ப்யூட்டர் மூலம் நடத்தும் பொறுப்பை "புரோமெட்ரிக்&' நிறுவனம் ஏற்றுள்ளது. 32 நகரங்களில் 105 மையங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது. எழுத்து தேர்வு மூலம் இல்லாமல், கம்ப்யூட்டர் மூலம் நடப்பதால், மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த முறையை போல இல்லாமல் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரிகிறது.
