தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு


UPDATED : நவ 02, 2009 12:00 AM

ADDED : நவ 02, 2009 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2009 12:00 AM ADDED : நவ 02, 2009 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள 156 விரிவுரையாளர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், தேர்வுக்கான விண்ணப்பம் அக்.,5 முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் 250 ரூபாய், பிற பிரிவினர் 500 ரூபாய்க்கு ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 6 என்ற முகவரிக்கு, டி.டி., எடுத்து விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அக்.,30க்குள் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
தேர்வு வாரியம் 15 ஆயிரம் விண்ணப்பங்களை வழங்கியது. கடைசி நாளான அக்.,30ம் தேதி எட்டாயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்றது தெரிந்தது. இதையடுத்து, அச்சடித்த விண்ணப்பங்கள் முழுமையையும் விற்கும் நோக்கில், விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்ததை திரும்ப வழங்கவும் நவ.,7ம் தேதி கடைசி நாள் என, கால அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு, டிச.,6ல் நடக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us