தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்கல்லில் இறங்கிய விண்கலம்; நாசா சாதனை

விண்கல்லில் இறங்கிய விண்கலம்; நாசா சாதனை

விண்கல்லில் இறங்கிய விண்கலம்; நாசா சாதனை


UPDATED : அக் 23, 2020 12:00 AM

ADDED : அக் 23, 2020 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2020 12:00 AM ADDED : அக் 23, 2020 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூயார்க்:
நாசா அனுப்பிய விண்கலம் நான்கு ஆண்டுகளுக்குப்பின் &'பென்னு&' என்ற விண்கல் மீது தரையிறங்கியது.
1999 செப்., 11ல் நாசா பூமி - செவ்வாய் இடையே சுற்றி வரும் விண்கல்லை கண்டுபிடித்தது. இதற்கு &'101955 பென்னு&' என பெயரிட்டது. இதை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா 2016 செப்., 8ம் தேதி &'ஒசிரிஸ் - ரெக்ஸ்&' விண்கலத்தை &'அட்லஸ் வி 411&' ராக்கெட் மூலம் அனுப்பியது. இது 2018 டிச., 31ல் &'பென்னு&' குறுங்கோளின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. பின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது.
சோதனை முயற்சியாக 2020 ஏப்., 15ல் விண்கல் தரைப்பகுதியில் இருந்து 213 அடி உயரம் வரையும், ஆக., 11ல் 130 அடி உயரம் வரையும் தரையிறக்கி சோதிக்கப்பட்டது. நேற்று (இந்திய நேரப்படி அக்., 22 அதிகாலை 3:42 மணி) வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு 6 வினாடி மட்டுமே இருந்த விண்கலம், தனது 11 அடி நீளமான கை போன்ற ரோபோவால் குறுங்கோளில் துளையிட்டு பாறை துகள்கள் அடங்கிய மாதிரியை எடுத்தது.
மீண்டும் சுற்றுபாதைக்கு வந்தது. 2023 செப்., 27ல் பூமியை வந்தடையும் என நாசா தெரிவித்து உள்ளது. திட்டத்துக்கான செலவு ரூ. 7250 கோடி. இதன் விட்டம் 1610 அடி. பூமியில் இருந்து இதன் துாரம் மாறிக்கொண்டே இருக்கும். அக்., 20ல் 32.1 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தது. இது அடுத்த நுாற்றாண்டில் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதாக நாசா கணித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us