தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., சேர்க்கை

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., சேர்க்கை

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., சேர்க்கை


UPDATED : நவ 17, 2020 12:00 AM

ADDED : நவ 17, 2020 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2020 12:00 AM ADDED : நவ 17, 2020 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கான துணை கவுன்சிலிங் நாளை நடக்கிறது.
தமிழகத்திலுள்ள பல்கலை, இன்ஜி., கல்லுாரிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள், மேலாண்மை கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை &'ஆன்லைன் கவுன்சிலிங்&' வாயிலாக நிரப்பப்பட்டது. முதலில், எம்.சி.ஏ., படிப்புக்கும், தொடர்ந்து எம்.பி.ஏ., படிப்புக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. கவுன்சிலிங் முடிந்தும், பல கல்லுாரிகளில் இடங்கள் காலியாக உள்ளன.காலியிடங்களை நிரப்ப, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., படிப்புகளுக்கு நாளை துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பொது கவுன்சிலிங் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவர்கள், கல்லுாரி ஒதுக்கீடு பெறாதவர்கள், &'டான்செட் - 2020&' தேர்வு எழுதி இதுவரை கவுன்சிலிங்கிற்கு இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்காதவர்கள், பதிவு செய்யாதவர்கள் ஆகிய அனைவரும் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்ப மற்றும் கவுன்சிலிங் கட்டணத்துடன், நாளை காலை, 10.00 மணிக்கு முன், மாணவர்கள் நேரிடையாக கோவை ஜி.சி.டி., கல்லுாரிக்கு சென்று பங்கேற்கலாம்.
இந்த துணை கவுன்சிலிங், தரவரிசை மற்றும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தகவல்களுக்கு www.gct.ac.in/www.tn-mbamca.com என்ற, இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us