தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்புக்கு பட்டம் மட்டுமே போதாது: துணைவேந்தர்

வேலைவாய்ப்புக்கு பட்டம் மட்டுமே போதாது: துணைவேந்தர்

வேலைவாய்ப்புக்கு பட்டம் மட்டுமே போதாது: துணைவேந்தர்


UPDATED : நவ 06, 2009 12:00 AM

ADDED : நவ 06, 2009 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2009 12:00 AM ADDED : நவ 06, 2009 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ., துறை சார்பில், நடப்பு கல்வியாண்டின் வேலைவாய்ப்புக்கான, மாணவர் கள் தகவல் குறிப்பேடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.


குறிப்பேட்டை வெளியிட்டு, சென்னைப் பல் கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:
 
போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில், பட்டம் மட்டுமே வேலை பெறுவதற்கு போதுமானதாக இல்லை. இதை கருத்தில்கொண்டு, சென்னைப் பல்கலைக் கழக மாணவர்களின் ஆங்கில அறிவு, தலைமைப் பண்பு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, எம்.பி.ஏ., துறைக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும். முதுநிலை பட்டபடிப்பு படிக்கும்போதே கம்ப்யூட்டர்&', தொடர் பான அறிவையும் மாணவர்கள்பெற வழிவகை செய்யப்படும்.

இன்று உலகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால், எம்.பி.ஏ., மாணவர் களுக்கு குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க வேண்டும். இரு மாதங்களுக்கு ஒருமுறை, பணிவாய்ப்பு தரும் தொழில் நிறுவனங்களை பல்கலைக்கழகம் சார்பில் சந்திக்க வேண்டும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு பிரிவு அலுவலர் ஆராவமுதன், எம்.பி.ஏ., துறை மாணவ, மாணவியர், பல முன்னணி தனியார் நிறுவனங்களின் மனிதவள துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us