UPDATED : ஜன 23, 2021 12:00 AM
ADDED : ஜன 23, 2021 09:35 AM
புதுச்சேரி:
மேட்டுப்பாளையத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
புதுச்சேரி மாநில இலகு உத்யோக் பாரதி, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் காப்புறுதி திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு அலுவலகம், இ.எஸ்.ஐ மண்டல குழு சார்பில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
மேட்டுப்பாளையம் வர்த்தக மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இலகு உத்யோக் பாரதி புதுச்சேரி தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். வர்த்தக சபை தலைவர் திருமால், செயலர் நந்தகுமார், இ.எஸ்.ஐ மண்டலகுழு உறுப்பினர்கள் ரத்தினவேலு, பிரதீப்குமார், சிவஞானம் முன்னிலை வகித்தனர்.
இலகு உத்யோக் பாரதி தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஜெயக்குமார் நோக்கவுரையாற்றினர். சிறு, குறு தொழில்கள் ஆரம்பிக்கும் வழிமுறை கள், வங்கி கடன் வசதிகள், ஏற்றுமதி, சந்தைப்படுத்தல் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
