தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போராடும் மாணவர்களுக்கு காங்., அழகிரி அட்வைஸ்

போராடும் மாணவர்களுக்கு காங்., அழகிரி அட்வைஸ்

போராடும் மாணவர்களுக்கு காங்., அழகிரி அட்வைஸ்


UPDATED : ஜன 30, 2021 12:00 AM

ADDED : ஜன 30, 2021 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2021 12:00 AM ADDED : ஜன 30, 2021 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
&'தினமும் 2 மணி நேரம் மருத்துவ பணியை பாருங்கள்&' என மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் தமிழக காங்., தலைவர் அழகிரி பேசினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியில், அரசு கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி, மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தும் போராட்டம் தொடர்கிறது. பல்வேறு அரசியில் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், நேற்று தமிழக காங்., தலைவர் அழகிரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது, &'உங்களின் போராட்டம் நியாயமானது. தினமும் 2 மணி நேரம் நீங்கள் மருத்துவ பணியை பாருங்கள். நோயாளிகளுக்கு உங்கள் போராட்டம் குறித்து விளக்கி சிரமங்களைக் கூறி ஆதரவு தெரிவித்து 5 நிமிடம் போராட்டத்தில் பங்கெடுக்கச் சொல்லுங்கள்.அது மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறும்.
அப்போது போராட்டம் குறித்து பேசப்படும். மக்கள் ஆதரவு பெருகும். அரசும் பணியும்&' என்றார். 
அப்போது இளைஞர் காங்., தலைவர் ராகுலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் எங்களிடம் பேச வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அழகிரி, ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். மாநில துணைத் தலைவர் மணிரத்தினம், செயலாளர் சித்தார்த்தன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us