UPDATED : பிப் 03, 2021 12:00 AM
ADDED : பிப் 03, 2021 10:49 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதனால், சிவகங்கை மாவட்டம், கீழடி; துாத்துக்குடி மாவட்டம்,ஆதிச்சநல்லுார், சிவகளை, கொற்கை; ஈரோடு மாவட்டம் கொடுமணல்; கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை. அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மாளீகைமேடு ஆகிய இடங்களில், இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடக்க உள்ளன. இப்பணிகளை, முதல்வர் பழனிசாமி., அடுத்த வாரம் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார்.
