தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மர் மருத்துவ கல்லுாரி மாணவியிடம் மோசடி!

ஜிப்மர் மருத்துவ கல்லுாரி மாணவியிடம் மோசடி!

ஜிப்மர் மருத்துவ கல்லுாரி மாணவியிடம் மோசடி!


UPDATED : பிப் 08, 2021 12:00 AM

ADDED : பிப் 08, 2021 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2021 12:00 AM ADDED : பிப் 08, 2021 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவ மாணவியிடம் நுாதன முறையில், ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் முதுநிலை மருத்துவ மாணவி அனு தபார், 25; இவருக்கு ஏப்ரல் மாதத்தோடு முதுநிலை படிப்பு முடிவதால், அறையில் உள்ள பிரிட்ஜ், ஏசி விற்க கடந்த 31ம் தேதி ஓ.எல்.எக்ஸ்., மூலம் பதிவிட்டார். இதையடுத்து அனு தபாரிடம் பேசிய நபர், நான் துணை ராணுவ வீரர் என்றும், புதுச்சேரியில் உள்ள தங்கைக்கு வேண்டும் என கூறி, அனு தபாரின் மொபைல் வாலட்டினை கேட்டார். சிறிது நேரத்தில் மொபைல் வாலட்டிற்கு பணம் அனுப்ப முடிய வில்லை எனவும், கியூ.ஆர். கோடு அனுப்பி, இரண்டு முறை ரூ.5 அனுப்ப கூறினார். அவர் அனுப்பிய பணத்தை சிறிது நேரத்தில் மறுமுனையில் பேசிய நபர் திரும்ப அனுப்பி விட்டார்.
பின்னர் அனு தபாரை தொடர்பு கொண்டு நீங்கள் இரு முறை ரூ.25 ஆயிரமாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். இதன்படி இரண்டு முறை ரூ. 25 ஆயிரம் கியூ.ஆர் கோர்டில் பதிவிட்டு, வங்கி கணக்கிற்கு ரூ. 50 ஆயிரத்தை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அனு தபார் வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் குறைந்துள்ளது. மீண்டும் மொபைலில் தொடர்பு கொண்ட நபர், உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்தததா என கேட்டார். எனது வங்கி கணக்கில் இருந்து குறைந்துள்ளது என அனு தபார் கூறினார். இதனால் வேறு கியூ.ஆர் கோர்டு அனுப்புகிறேன். அதன் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
இதன்படி புதிதாக வந்த கியூ.ஆர் கோர்டில் ரீசிவ் பகுதியை அழுத்த, அவரது வங்கி கணக்கில் மேலும் ரூ.50 ஆயிரம் குறைந்துள்ளது.ரூ. ஒரு லட்சம் பறி போன பிறகு தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அனு தபார், சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவித்தார். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆன் லைனில் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us