UPDATED : பிப் 08, 2021 12:00 AM
ADDED : பிப் 08, 2021 10:57 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான முன்பதிவு முகாம் கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது.
தொழிலாளர் துறையின் கீழ் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக, குறுகிய மற்றும் நீண்ட கால திறன் மேம்பாட்டுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு முகாம் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்தது.
தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து பேசினார். திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஏராளமான மாணவ, மாணவிகள் பதிவு செய்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை, திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
