தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமைச்சர் வீட்டை லேப் டெக்னீஷியன்கள் முற்றுகை

அமைச்சர் வீட்டை லேப் டெக்னீஷியன்கள் முற்றுகை

அமைச்சர் வீட்டை லேப் டெக்னீஷியன்கள் முற்றுகை


UPDATED : பிப் 24, 2021 12:00 AM

ADDED : பிப் 24, 2021 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2021 12:00 AM ADDED : பிப் 24, 2021 08:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பணி நிரந்தரம் கோரி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை, &'லேப் டெக்னீஷியன்&'கள், இரண்டாவது நாளாக, நேற்று முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்த போது, ஆயிரக்கணக்கான பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆய்வகங்களில் பணியாற்ற, லேப் டெக்னீஷியன் கள் நியமிக்கப்பட்டனர். அவர்களது பணிக்காலம், இம்மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், &'கொரோனா காலத்தில், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். எனவே, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்&' என, அவர்கள் கோரி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன், இரண்டாவது நாளாக அவர்கள், முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களில், நான்கு பேரை அழைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு நடத்தினார்.
அப்போது, &'மேலும் மூன்று மாதங்களுக்கு, பணி நீட்டிப்பு செய்கிறேன்; பின், படிப்படியாக நடவடிக்கை எடுக்கிறேன்&' என, அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us