UPDATED : மார் 02, 2021 12:00 AM
ADDED : மார் 02, 2021 09:07 AM
புதுச்சேரி;
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் பணி நியமன ஆணைகளை வழங்கியது.
புதுச்சேரி பொறியியல் கல்லுாரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு இறுதியாண்டு மாணவர்களை வளாக நேர்காணல் மூலமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன.
கொரோனா தொற்று காலக் கட்டத்திலும் 30 நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக நேர்காணல் நடத்தி 172 மாணவர்களை தேர்வு செய்துள்ளன. அதிகபட்சமாக, ஆண்டு சம்பளம் ரூ.12 லட்சம் வழங்கி மாணவர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
சராசரி சம்பளமாக ஆண்டுக்கு ரூ.4.9 லட்சம் வழங்கியுள்ளன. அமெரிக்க முன்னணி நிறுவனமான டெலாய்ட் கன்சல்டிங் நான்கு மாணவர்களை தேர்வு செய்து, ஆண்டிற்கு ரூ.7.6 லட்சம் சம்பளம் நிர்ணயித்து பணி நியமன ஆணை வழங்கியது. மாணவர்களை கல்லுாரி முதல்வர் கோதண்டராமன், வேலைவாய்ப்பு அதிகாரி இளஞ்செழியன், தகவல் தொழில் நுட்பத் துறை தலைவர் பேராசிரியர் கோவிந்தசாமி, பேராசிரியர்கள் சாலினி, தாட்சாயணி ஆகியோர் பாராட்டினர்.
