பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு
UPDATED : நவ 09, 2009 12:00 AM
ADDED : நவ 09, 2009 10:47 AM
அ நிறம் | அளவு
சென்னை: மழை காரணமாக சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 9ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது.
மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, அந்தந்த மாவட்ட கலெடர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவ தாக கல்வித்துறை வட் டாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
