தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘தேர்வை எளிதாக சந்திக்க...’: இறையன்பு அறிவுரை

‘தேர்வை எளிதாக சந்திக்க...’: இறையன்பு அறிவுரை

‘தேர்வை எளிதாக சந்திக்க...’: இறையன்பு அறிவுரை


UPDATED : நவ 09, 2009 12:00 AM

ADDED : நவ 09, 2009 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2009 12:00 AM ADDED : நவ 09, 2009 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சுற்றுலாத்துறைச் செயலர் இறையன்பு பேசியதாவது:


தேர்வை எளிதில் சந்திக்க சில ‘டெக்னிக்’ விஷயங்களை சொல்லுகிறேன். அதை பின் பற்றினால் தேர்வை கண்டு பயப்படத் தேவையில்லை. நீங்கள் அனைவரும் பத்து நிமிடம் கண்களை மூடிக்கொண்டு, தேர்வு அறைக்கு செல்வது போலவும், அங்கு கொடுக்கும் தேர்வுத் தாளை பார்த்த உங்களுக்கு, அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிவது போலவும், அதற்கான பதிலை சிறப்பாக எழுதுவதாகவும் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.


இந்த காட்சியை தினமும் தூங்கும் முன், உங்களது மனத் திரையில் மறக்காமல் ஓட்டிப் பாருங்கள். இப்படி தொடர் பயிற்சி செய்வதன் மூலம், தேர்வு அறையில் பதற்றம் இல்லாது, தேர்வை சந்திக்க முடியும். அடுத்து, எந்தெந்த பாடங்களில், எதைப் படிக்க வேண்டும் மற்றும் அதற்கான நேரம் உள்ளிட்ட ஒரு அட்டவணையை தயார் செய்யுங்கள். அந்த அட்டவணையில் உள்ளது போல், தேவைப்பட்டால் விடியற்காலையில் எழுந்து படியுங்கள்.


விடியற்காலையில் எழுந்து படிப்பது, ஆரம்பத்தில் சிரமமாகத் தான் இருக்கும். ஆனால், எந்தவொரு செயலையும், தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்றி விட்டால், அதுவே பின்னர் பழக்கமாகிவிடும். ஒரு பாடத்தை தொடர்ந்து படிக்காமல் இருந்தால் மறந்துவிடும். ஆகையால், அனைத்து பாடங்களையும் தினமும் படிக்கும் வகையில் அட்டவணை தயார் செய்ய வேண்டும். பாடங்களில் மனப்பாடம் செய்ய வேண்டியதை, ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும். அதை தினமும் காலை அரை மணி நேரம் திரும்பத் திரும்ப படிக்க வேண்டும்.


எந்தவொரு தேர்வாக இருந்தாலும், படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. மாறாக படிப்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் வெற்றிக் கிட்டும். படிக்கும் போது கவனம் சிதறாமல் படிப்பது முக்கியம். ‘டிவி’ பார்த்துக் கொண்டே படிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், பாடத்தை விருப்பத்துடன் படிக்க வேண்டும். இதை பின்பற்றினால், தேர்வை எளிதாக சந்திக்க முடியும். மேலும், தேர்வு நெருங்கும் காலங்களில் காய்கறிகள், இளநீர் உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சிறு உடற்பயிற்சி மற்றும் இனிமையான இசை கேட்பது போன்றவை கூட நல்ல மனநிலையை கொடுத்து படிப்பதற்கு உதவும்.


தேர்வு எழுதும் முன், படிக்காத பாடங்களைப் பற்றி கவலை கூடாது. தேர்வில் அதிக பக்கங்கள் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. தேர்வுக்கு முதல் நாள், பாடங்கள் தொடர்பான சிறு குறிப்புகளை மட்டுமே படியுங்கள். மீண்டும் மொத்தமாக அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டாம். இப்படி தயாராகும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில் சிரமம் எதுவும் இருக்காது. இவ்வாறு இறையன்பு பேசினார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us